- திருநீலகண்ட நாயனார்
- இயற்பகை நாயனார்
- இளையான்குடிமாற நாயனார்
- மெய்ப்பொருள் நாயனார்
- விரல்மிண்ட நாயனார்
- அமர்நீதியார்
- எறிபத்த நாயனார்
- ஏனாதிநாதர்
- கண்ணப்ப நாயானார்
- குங்கிலியக்கலய நாயனார்
- மானக்கஞ்சறார்
- அரிவாட்டாய நாயனார்
- ஆனாய நாயனார்
- மூர்த்தி நாயனார்
- உருத்திரபசுபதி நாயனார்
- முருக நாயனார்
- திருநாளைப்போவார் (நந்தனார்)
- திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
- சண்டேசுர நாயனார்
- திருநாவுக்கரசர் சுவாமிகள்
- குலச்சிறையார் நாயனார்
- பெருமிழலைக் குறும்ப நாயனார்
- பேயார் [காரைக்கால் அம்மையார்]
- அப்பூதி அடிகள்
- திருநீலநக்கர்
- நமிநந்தி அடிகள்
- திருஞானசம்பந்தர்
- ஏயர்கோன் கலிக்காம நாயனார்
- திருமூலர்
- தண்டி அடிகள்
- மூர்க்க நாயனார்
- சோமாசிமாற நாயனார்
- சாக்கிய நாயனார்
- சிறப்புலி நாயனார்
- சிறுத்தொண்ட நாயனார்
- சேரமான் பெருமாள் நாயனார்
- கணநாத நாயனார்
- கூற்றுவ நாயனார்
- புகழ்ச்சோழர்
- நரசிங்க முனையரையர்
- அதிபத்த நாயனார்
- கலிக்கம்ப நாயனார்
- கலிய நாயனார்
- சத்தி நாயனார்
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- கணம்புல்ல நாயனார்
- காரி நாயனார்
- நின்றசீர் நெடுமாறனார்
- வாயிலார்
- முனையடுவார் நாயனார்
- கழற்சிங்க நாயனார்
- இடங்கழி நாயனார்
- செருத்துணை நாயனார்
- புகழ்த்துணை நாயனார்
- கோட்புலி நாயனார்
- பூசலார் நாயனார்
- மங்கையர்க்கரசியார்
- நேசர் நாயனார்
- கோச்செங்கட் சோழர் நாயனார்
- திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- சடையனார் நாயனார்
- இசைஞானியார்
- சுந்தரமூர்த்தி நாயனார்
devotional
Search This Blog
Sunday, October 31, 2010
63 NAYANMARGAL
Saturday, October 30, 2010
Thiruneeru pathigam
திருச்சிற்றம்பலம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புண்மைதவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமாதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
அருத்தமதவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற திப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புண்மைதவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமாதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
அருத்தமதவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற திப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
Wednesday, October 27, 2010
LINGASTAKAM
Brahma Murari Sura architha Lingam,
Nirmala bashitha Shobitha Lingam,
Janmaja dukha vinasaka lingam.
That pranamami sada shiva lingam.
Nirmala bashitha Shobitha Lingam,
Janmaja dukha vinasaka lingam.
That pranamami sada shiva lingam.
Deva Muni pravarchitha Lingam,
Kama dahana Karunakara lingam,
Ravana darpa vinashaha lingam,
That pranamami sada shiva lingam.
Kama dahana Karunakara lingam,
Ravana darpa vinashaha lingam,
That pranamami sada shiva lingam.
Sarva sukandhi sulepitha lingam,
Budhi vivarthana karana lingam,
Siddha surasura vandhitha lingam,
That pranamami sada shiva lingam.
Budhi vivarthana karana lingam,
Siddha surasura vandhitha lingam,
That pranamami sada shiva lingam.
Kanaka mahamani bhooshitha lingam,.
Panipathi veshtitha shobitha lingam,
Daksha suyagna vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Panipathi veshtitha shobitha lingam,
Daksha suyagna vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Kunkuma chandana lepitha lingam,
Pankaja hara sushobitha lingam,
Sanchitha papa vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Pankaja hara sushobitha lingam,
Sanchitha papa vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Deva Ganarchitha sevitha lingam,
Bhavair bakthi pravesa lingam,
Dinakara koti prabhakara lingam,
That pranamami sada shiva lingam.
Bhavair bakthi pravesa lingam,
Dinakara koti prabhakara lingam,
That pranamami sada shiva lingam.
Ashta dalopari veshtitha lingam,
Sarva samudbhava karana lingam,
Ashta daridra vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Sarva samudbhava karana lingam,
Ashta daridra vinasaha lingam,
That pranamami sada shiva lingam.
Suraguru sura vara poojitha Lingam,
Sura vana pushpa sadarchitha lingam,
Paramapatham paramathmaka lingam,
That pranamami sada shiva lingam.
Sura vana pushpa sadarchitha lingam,
Paramapatham paramathmaka lingam,
That pranamami sada shiva lingam.
Lingashtakam, Idam Punyam padeth Shiva Sannidhow,
Shivalokam avapnothi shive na sahamodathe.
Shivalokam avapnothi shive na sahamodathe.
THIRU ANGAMALAI
திருச்சிற்றம்பலம் |
| தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந்தலைவனை தலையே நீ வணங்காய்! |
| கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை கண்கள் காண்மின்களோ |
| செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனி பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ |
| மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய் |
| வாயே வாழ்த்துக்கண்டாய் மத யானை உரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துக் கண்டாய் |
| நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் |
| ஆக்கையால் பயனென் அரன் கோவில் வலம்வந்து பூக்கையால் அட்டிபோற்றி என்னாத இவ் ஆக்கையால் பயனென் |
| கால்களால் பயனென் கரைக்கண்டன் உறை கோவில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களால்பயனென் |
| கைகாள் கூப்பித் தொழீர் கடி மாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர் |
| உற்றார் ஆருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத் துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ |
| இறுமாந்திருப்பன்கொலோ பல்கணத் தென்னப்பட்டுச் சிறுமானேந்தி தன் சிவன் சேவடிக்கீழ்ச்சென்றங்கு இறு மாந்திருப்பன்கொலோ |
| தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன் |
திருச்சிற்றம்பலம் |
THIRUPACHILACHARAMAM
திருச்சிற்றம்பலம் |
| துணிவளர் திங்கள் துளங்கி விளங்க |
| சுடர்ச்சுடை சுற்றி முடித்து, |
| பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ, |
| ஆரிடமும் பலி தேர்வர்; |
| அணிவளர் கோலம் எலாம் செய்து, |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| மணிவளர் கண்டரோ, மங்கையை வாட |
| மயல் செய்வதோ, இவர்மாண்பே |
| கலைபுனை மானஉரி தோல்உடை ஆடை, |
| கனல் சுடரால் இவர்கண்கள், |
| தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர், |
| தம்அடிகள் இவர் என்ன |
| அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| இலைபுனை வேலரோ, ஏழையை வாட, |
| இடர்செய்வதோ, இவர் ஈடே |
| வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்; |
| மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்; |
| நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு |
| இடமாக நண்ணுவர், நம்மை நயந்து |
| மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி |
| வாடச் சிதை செய்வதோ இவர் சீரே |
| கன மலர்க் கொன்றை அலங்கல் |
| இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி |
| புனமலர் மாலை அணிந்து, அழகு |
| ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன, |
| அனம் மலி வண்பொழில் சூழ்தரு |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| மனம் மலி மைந்தரோ மங்கையை |
| வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே |
| மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து |
| ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து |
| மோந்தை, முழா, குழல், தாளம் ஓர் |
| வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி, |
| ஆந்தை விழிச் சிறு பூதத்தர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் |
| சதுர் செய்வதோ, இவர் சார்வே |
| நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, |
| நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி |
| ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி, |
| ஐவிரல் கோவண ஆடை |
| பால்தரு மேனியர், பூதத்தர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| ஏறுஅது ஏறியர், ஏழையை வாட, |
| இடர் செய்வதோ இவர்ஈடே |
| பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு |
| ஆமை வெண்நூல், புனைகொன்றை |
| கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய, |
| குழகர் கொல் ஆம், இவர் என்ன |
| அங்கு இள மங்கை ஓர் பங்கினர்; |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் |
| சதிர் செய்வதோ இவர்சார்வே |
| ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து, |
| இராவணன் தன்னை ஈடு அழித்து, |
| மூவரிலும் முதல் ஆய், நடு ஆய |
| மூர்த்தியை அன்றி மொழியாள்; |
| யாவர்களும் பரவும் தொழில் |
| பாச்சலாச்சிராமத்து உறைகின்ற |
| தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் |
| சிதை செய்வதோ, இவர் சேர்வே |
| மேலது நான்முகன் எய்தியது இல்லை; |
| கீழது சேவடி தன்னை |
| நீலது வண்ணனும் எய்தியது இல்லை; |
| என இவர் நின்றதும் அல்லால் |
| ஆல்அது மாமதி தோய்பொழில் |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப் |
| பழிசெய்வதோ, இவர் பண்பே |
| நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர், |
| அவர் இருபோதும்; |
| ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் |
| அவை கொள வேண்டா; |
| ஆணோடு பெண்வடிவு ஆயினர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் |
| புனை செய்வதோ, இவர் பொற்பே |
| அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க, |
| ஆச்சிராமத்து உறைகின்ற |
| புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய |
| புனிதர் கொல் ஆம் இவர் என்ன, |
| நகைமலி தண் பொழில் சூழ்தரு |
| காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் |
| தகைமலி தண்தமிழ் கொண்டு இவை |
| ஏத்த, சாரகிலா வினைதானே. |
திருச்சிற்றம்பலம் |
THIRUMURAI - SIVAPURANAM
திருச்சிற்றம்பலம் |
| நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க |
| இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க |
| கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க |
| ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க |
| ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க |
| வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க |
| பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க |
| புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க |
| கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க |
| சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 |
| ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி |
| தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி |
| நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி |
| மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி |
| சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 |
| ஆராத இன்பம் அருளும் மலை போற்றி |
| சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் |
| அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் |
| சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை |
| முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 |
| கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி |
| எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி |
| விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், |
| எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் |
| பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 |
| புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் |
| பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் |
| கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் |
| வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் |
| செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 |
| எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் |
| மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் |
| உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற |
| மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் |
| ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 |
| வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா |
| பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி |
| மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே |
| எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே |
| அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 |
| ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் |
| ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் |
| போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் |
| நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே |
| மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 |
| கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் |
| சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று |
| பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் |
| நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த |
| மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 |
| மறைந்திட மூடிய மாய இருளை |
| அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி |
| புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, |
| மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை |
| மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 |
| விலங்கு மனத்தால், விமலா உனக்கு |
| கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் |
| நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி |
| நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, |
| நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 |
| தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே |
| மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே |
| தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே |
| பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே |
| நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 |
| பேராது நின்ற பெருங்கருணைப் போராறே |
| ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே |
| ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே |
| நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே |
| இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 |
| அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் |
| சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே |
| ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே |
| ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே |
| கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 |
| நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே |
| போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே |
| காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே |
| ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற |
| தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 |
| மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் |
| தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் |
| ஊற்றான உண்ணார் அமுதே உடையானே |
| வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப |
| ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 |
| போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் |
| மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே |
| கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே |
| நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே |
| தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 |
| அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று |
| சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் |
| சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் |
| செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் |
| பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 |
திருச்சிற்றம்பலம் |
KOLARU PATHIKAM
| திருச்சிற்றம்பலம் |
| வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், |
| மிக நல்ல வீணை தடவி, |
| மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, |
| சனி, பாம்புஇரண்டும், உடனே |
| ஆசு அறும்; நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, |
| எருது ஏறி, ஏழைஉடனே, |
| பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், |
| உடன்ஆய நாள்கள்அவைதாம், |
| அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து, |
| உமையோடும், வெள்ளைவிடைமேல், |
| முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| திருமகள், கலைஅதுஊர்தி, செயமாது, பூமி, |
| திசைதெய்வம்ஆனபலவும், |
| அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து |
| மறை ஓதும் எங்கள் பரமன், |
| நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர், |
| கொடுநோய்கள்ஆனபலவும், |
| அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும் |
| விடை ஏறும் நங்கள் பரமன், |
| துஞ்சு இருள்---வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து---என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும், |
| மிகைஆன பூதம்அவையும், |
| அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| வாள்வரிஅதள்அது ஆடை வரி கோவணத்தர் |
| மடவாள்தனோடும் உடன்ஆய், |
| நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல், |
| கொடு நாகமோடு, கரடி, |
| ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| செப்புஇளமுலை நல் மங்கை ஒருபாகம்ஆக |
| விடை ஏறு செல்வன், அடைவு ஆர் |
| ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும், |
| வினைஆன, வந்து நலியா; |
| அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| வேள் பட விழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து, |
| மடவாள்தனோடும் உடன்ஆய், |
| வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும் |
| இடர்ஆன வந்து நலியா; |
| ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| பலபலவேடம் ஆகும் பரன், நாரிபாகன், |
| பசு ஏறும் எங்கள் பரமன், |
| சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் |
| வரு காலம்ஆனபலவும், |
| அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு |
| குணம்ஆய வேட விகிர்தன், |
| மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் |
| திருநீறு செம்மை திடமே; |
| அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
| தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, |
| வளர் செம்பொன் எங்கும் நிகழ, |
| நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து |
| மறைஞான ஞானமுனிவன், |
| தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து |
| நலியாத வண்ணம் உரைசெய் |
| ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில் |
| அரசு ஆள்வர்; ஆணை நமதே. |
திருச்சிற்றம்பலம் |
Subscribe to:
Comments (Atom)