திருச்சிற்றம்பலம் |
| தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந்தலைவனை தலையே நீ வணங்காய்! |
| கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னை கண்கள் காண்மின்களோ |
| செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனி பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ |
| மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய் |
| வாயே வாழ்த்துக்கண்டாய் மத யானை உரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துக் கண்டாய் |
| நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் |
| ஆக்கையால் பயனென் அரன் கோவில் வலம்வந்து பூக்கையால் அட்டிபோற்றி என்னாத இவ் ஆக்கையால் பயனென் |
| கால்களால் பயனென் கரைக்கண்டன் உறை கோவில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களால்பயனென் |
| கைகாள் கூப்பித் தொழீர் கடி மாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர் |
| உற்றார் ஆருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத் துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ |
| இறுமாந்திருப்பன்கொலோ பல்கணத் தென்னப்பட்டுச் சிறுமானேந்தி தன் சிவன் சேவடிக்கீழ்ச்சென்றங்கு இறு மாந்திருப்பன்கொலோ |
| தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன் |
திருச்சிற்றம்பலம் |
கரைக்கண்டன் என்பது தவறு.
ReplyDeleteகறைக்கண்டன் உறை கோயில்..
இறுமாந்திருப்பன்கொலோ _ ஈசன்
ReplyDeleteபல்கணத்தெண்ணப்பட்டு.
இதில் ஈசன் என்பது விடுபட்டிருக்கிறது. மேலும் என்னப்பட்டு அல்ல.. எண்ணப்பட்டு.
வாயே வாழ்த்து கண்டாய்... வாழ்த்துவாயாக எனும் பொருளில் வரும்.
ReplyDeleteவாழ்த்துக் கண்டாய் என்பது இலக்கணப்படியும் தவறு.